மாவட்டம்

ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளம்பெண்ணின் வீடியோ வைரல்...

Malaimurasu Seithigal TV

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர்.இதில் முன்னாள் வாலிபர் ஒருவர் வாகனத்தை ஓட்டுகிறார்.

வாலிபரின் பின்னால் ஒரு பெண் அமர்ந்துள்ளார்.அவர்களுக்கு பின்னால் இளம்பெண் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் பின்பக்கம் திரும்பி அமர்ந்து பயணம் மேற்கொள்கிறார்.

இதனை மற்றொரு வண்டியில் வந்த ஒருவர் செல்போனில் வீடியோ பிடிப்பதை பார்த்தவுடன் முகத்தை கையால் மறைத்துக் கொள்கிறார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.