மாவட்டம்

சமூக வலைதளத்தில் சர்ச்சையான பதிவு...! வாலிபர் கைது...!!

Malaimurasu Seithigal TV

சமூக வளைதளத்தில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்ட வாலிபரை இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
  
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் இரு சமுதாயத்தினரிடையே ஏற்கனவே ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து மேலும் பிரச்சனைகள் ஏற்படாத வகையில் கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இராமேஸ்வரம் பகுதியில் நிலவி வரும் சுமுகமான நிலையை குலைக்கும் வகையில் மேலும் பிரச்சனையை தூண்டும் விதமான சமூக வலைதளத்தில் பதிவிட்ட பரமக்குடி அருகே கமுதக்குடியை சேர்ந்த  முருகன் மகன் மதன் விக்னேஷ்(25) என்பவர் மீது இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சமூக வலைதளங்களில் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக வாசகங்களை பதிவு செய்த மதன் விக்னேஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார்.

இது போன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக வலைதளங்கள் மூலம் வன்முறை தூண்டும் விதமாகவோ,
இருசமுதாயத்தினருக்கிடையே பிரச்சனை ஏற்படுத்தும் விதமாகவோ செய்திகளை பரப்பும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்துள்ளார்.