மாவட்டம்

மலைபாம்பைப் பிடித்து செல்ஃபீ எடுத்த இளைஞர்கள்...

கீழ்குப்பம் கிராமத்தில் ஊருக்குள் புகுந்த 7 அடி நீள மலைப்பாம்பை பிடித்து செல்பி எடுத்து இளைஞர்கள் மகிழ்ந்தனர்.

Malaimurasu Seithigal TV

கிருஷ்ணகிரி | போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் ஒரு புதுவிதமான சத்தம் கேட்டுள்ளது.

சத்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் டார்ச் லைட் அடித்துப் பார்த்தபொழுது புகுந்த 7 அடி நீள கொண்ட மலைப் பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே ஊர்ந்து சென்றுள்ளது.

இதனைக் கண்ட கிராம மக்கள் சத்தம் போடவே அங்கு திரண்ட இளைஞர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து பாம்பை தங்களது தோள்களின் மீது போட்டு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் வனத்துத்துறையினரிடம் ஒப்டைத்தனர்.