job vacancy Admin
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

அரசு போக்குவரத்து கழகங்களில் 3274 ஓட்டுநர் நடத்துனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

www.arasubus.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு.

Anbarasan

நாளை பிற்பகல் 1 மணி முதல் முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை www.arasubus.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு.

சென்னை உள்ளிட்ட 8 போக்குவரத்து மண்டலங்கலுக்கு உட்பட்ட 25 பகுதிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை.

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

குறைந்தபட்ச தகுதியாக பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் எழுத்து தேர்வு, செய்முறை மற்றும் நேரடி நேர்காணல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

அதிகபட்சமாக கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் நடத்துனர் காலியிடங்களும்

சேலம் மண்டலத்தில் 486 ஓட்டுநர் நடத்துனர் காலிப்பணியிடங்களும்,

சென்னையில் 364ஓட்டுநர் நடத்துனர் பணியிடங்களும்

திருநெல்வேலி மண்டலத்தில் 362 ஓட்டுநர் நடத்துனர் காலிப்பணியிடங்களும்,

கோவை மண்டலத்தில் 344 ஓட்டுநர் நடத்துனர் காலிப்பணியிடங்களும்,

மதுரை மண்டலத்தில் 322 ஓட்டுநர் நடத்துனர் காலிப்பணியிடங்களும்,

விழுப்புரம் மண்டலத்தில் 322 ஓட்டுநர் நடத்துனர் காலிப்பணியிடங்களும்,

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 318 ஓட்டுநர் நடத்துனர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும் என சாலை போக்குவரத்து நிறுவனம் அறிவிப்பு.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்