இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (IIM) எனப்படும் இந்திய மேலாண்மை நிறுவனங்களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வான (CAT) 2025-க்கான விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 13, 2025 அன்று மாலை 5:00 மணிக்கு நிறைவடைகிறது. மேலாண்மைப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், IIM-CAT-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான iimcat.ac.in-க்குச் சென்று உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
CAT 2025: முக்கிய தேதிகள்
விண்ணப்பப் பதிவு கடைசி நாள்: செப்டம்பர் 13, 2025 (மாலை 5:00 மணி வரை)
அட்மிட் கார்டு பதிவிறக்கம்: நவம்பர் 5 முதல் நவம்பர் 30, 2025 வரை
CAT தேர்வுத் தேதி: நவம்பர் 30, 2025 (ஞாயிற்றுக்கிழமை)
தேர்வு நேரம்: மூன்று வெவ்வேறு ஷிப்டுகளில் நடத்தப்படும்.
தேர்வு, இந்தியா முழுவதும் 170 நகரங்களில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான ஐந்து தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
CAT 2025: தேர்வு கட்டணம்
பொதுப் பிரிவினர்: ₹2,600
SC, ST & மாற்றுத் திறனாளிகள்: ₹1,300
தேர்வுக்கான பதிவு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி CAT 2025-க்கு விண்ணப்பிக்கலாம்:
அதிகாரப்பூர்வ இணையதளமான iimcat.ac.in-க்குச் செல்லவும்.
முகப்புப் பக்கத்தில், "புதிய விண்ணப்பதாரர் பதிவு" (New Candidate Registration) என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒரு புதிய பக்கம் திறக்கும்.
அதில் உங்கள் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, நாடு, மொபைல் எண் ஆகியவற்றை பதிவிட்டு, OTP-ஐ உருவாக்கவும்.
உறுதிப்படுத்திய பிறகு, நீங்கள் கூடுதல் விவரங்களை உள்ளிட வேண்டியிருக்கும்.
தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்தவுடன், உங்கள் பதிவு வெற்றிகரமாக முடிவடையும்.
NIRF 2025 தரவரிசைப்படி சிறந்த 10 IIM's
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், அகமதாபாத் - தரவரிசை 1
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், பெங்களூரு - தரவரிசை 2
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், கோழிக்கோடு - தரவரிசை 3
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், டெல்லி - தரவரிசை 4
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், லக்னோ - தரவரிசை 5
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், மும்பை - தரவரிசை 6
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், கொல்கத்தா - தரவரிசை 7
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், இந்தூர் - தரவரிசை 8
மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் (MDI), குருகிராம் - தரவரிசை 9
XLRI - சேவியர் மேலாண்மைப் பள்ளி, ஜாம்ஷெட்பூர் - தரவரிசை 10
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.