கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவி தொகை திட்டமா? மத்திய அரசு அதிரடி...

சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை பார்ப்போம்.

Malaimurasu Seithigal TV

மத்திய அரசால் சிறுபான்மையராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் பார்சிகள் புத்த மதத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அதன்படி தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் www.scholorship.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 15.11.2022 அன்று விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பிக்க மாணவர்கள் கூடுதல் உதவி தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.