கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு ..!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதலாமாண்டு சேர்வதற்கு செப்டம்பர் 12 முதல் மூன்று நாள்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சில அரசு கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகளில் காலியாக உள்ளன.

இதையொட்டி கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.