தென் ஆப்பிரிக்காவில் உள்ள தன்சானிய நாட்டில் ஐஐடி மெட்ராஸ்- ன் புதிய கிளையை தொடங்க உள்ளோம் - ஐஐடி இயக்குநர் காமகோடி:
சென்னை அடையாறில் உள்ள ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் ஐஐடி இயக்குனர் காமகோடி, தொடர்ந்து 8 ஆண்டுகளாக பொறியியல் கல்லூரிகளின் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
NIRF தரவரிசை பட்டியலில் அனைத்து பொறியியல் கல்லூரிகளில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது.இது தன்னம்பிக்கையும் சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது என்றும், 100 சதவீதத்தில் 74% மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறுகிறார்கள் என்றும், அதனை 50% ஆக்குவதே தங்கள் முயற்சி என்றும் அன்று தான் தங்களுக்கு முழுமையான மகிழ்ச்சி எனவும் கூறினார்.
அதோடு, " ஐஐடி மாணவர்களின் மனநிலையை குறைக்கவும் உணர்ந்து கொள்ளவும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம். கிராமப்புறங்களில் BS DATA பற்றி மாணவர்கள் பேசுகிறார்கள்.அந்த அளவிற்கு கல்வி வளர்ச்சி முன்னேற்றம் அடைந்துள்ளது.தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சி நிகழ்ச்சி நடத்த உள்ளோம்.சாதிய பாகுபாடு குறித்த 2 கமிட்டி அமைக்க பட்டுள்ளது புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், " தரவரிசை என்பது ஒரு எண் தான். எந்த துறை படித்தாலும் அதிலும் இதே நிலை தான்.கணினி துறையை விட நல்ல மேம்பாடு அனைத்து துறைகளிலும் உள்ளது.மாணவர்களை பெற்றோர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் மனஅழுத்தத்தை உருவாக்க கூடாது.வருங்காலத்தில் பொறியியலில் துறை இருக்காது", என்று குறிப்பிட்டார்.
மேலும், மருத்துவ அறிவியல் ( Medical Science ) துறைக்கு தான் வருங்காலத்தில் அதிக மதிப்பு உள்ளது என்றும், மேலும், தென் ஆப்பிரிக்காவில் உள்ள தன்சானிய நாட்டில் ஐஐடி மெட்ராஸ் -ன் புதிய கிளையை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியா ஒரு வல்லரசாக தொடக்க நிறுவனங்கள் அதிகாக உருவாக வேண்டும் என்றும் மாணவர்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும் என்றார்.
இதையும் படிக்க | " பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைத்ததை ரத்து செய்ய வேண்டும் " - புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி .
மேலும், "கிராமப்புறங்களில் நேரடியாக சென்று கல்வி வளர்ச்சிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.தமிழ்நாட்டிற்கு 204 பள்ளிகள் 540 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி அளித்து வருகிறோம்.வருடத்திற்கு 1 லட்சத்திற்கு மேலான மாணவர்களுக்கு எலக்ட்ரானிக் குறித்த அறிவினை வளர்த்த உதவி செய்ய முடிவு செய்துள்ளோம்' என்று தெரிவித்தார்.
அதோடு, படிப்பில் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு புதுமையான கண்டுபிடிப்புகளையும் செய்ய புதிய கல்வி கொள்கை உதவும்.நுழைவு தேர்வு வைக்க காரணம் எத்தனை இடங்கள் உள்ளனவோ அதற்கு சரியான ஆட்களை கொண்டு வருவதற்கு தான் என்றும், பொதுத் தேர்வில் பலர் ஒரே சதவீதம் பெறுகிறார்கள் அதனால் தான் நுழைவு தேர்வு.Core subject -ல் படித்து வேலை செய்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அடுத்த ஆண்டு முதல் ஐஐடியில் மருத்துவ அறிவியல் ஆன்லைன் படிப்பினை தொடங்க உள்ளோம் என தெரிவித்தார்.
இதையும் படிக்க | தமிழ்நாடு காங்கிரஸில் ஓங்குகிறதா சசிகாந்தின் கை!