malaimurasu padipom jeipom Admin
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

"டாக்டர் ஆகலாமா இன்ஜினியர் ஆகலாமா" - இனி குழப்பம் வேண்டாம் உங்களின் உயர்கல்வி ஆலோசனையுடன் "படிப்போம் ஜெயிப்போம்"

நமது "மாலை முரசு தொலைக்காட்சி" முன்னெடுத்துள்ள ஒரு அற்புதமான நிகழ்ச்சிதான் இந்த "படிப்போம் ஜெயிப்போம் "நூறு நாட்கள் நூறு வல்லுனர்களுடன் உயர்கல்வியை பற்றி ஆலோசிக்கப்போகிறோம்.

Anbarasan

இன்று பன்னிரெண்டாம் வகுப்பு படித்து விட்டு, அடுத்து என்ன துறை தேர்தெடுக்கலாம், போட்டி தேர்வுகளை எதிர் கொள்வது எப்படி, எந்த துறை எடுத்தால் எப்படிப்பட்ட வாய்ப்புகள் இருக்கும் என்று மாணவர்கள், புலம்பும் நிலை உள்ளது, அதற்கு காரணம் நல்ல ஒரு வழிகாட்டி இல்லாததுதான்,ஏதோ சில மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டுதல்கள் கிடைத்தாலும் பலருக்கும் அவ்வாறே கிடைப்பதில்லை.

எனவே சில மாணவர்கள் திறமை இருந்தும், அதனை வெளிப்படுத்த முடியாமல், கிடைத்ததை ஏற்றுக்கொண்டு படிக்கின்றனர், ஒரு சரியான வழிகாட்டுதல் என்பது ஒவ்வொரு மாணவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நமது "மாலை முரசு தொலைக்காட்சி"முன்னெடுத்துள்ள ஒரு அற்புதமான நிகழ்ச்சிதான் இந்த "படிப்போம் ஜெயிப்போம் "நூறு நாட்கள் நூறு வல்லுனர்களுடன் உயர்கல்வியை பற்றி ஆலோசிக்கப்போகிறோம்.

நீங்களும் கால் பண்ணி பேசலாம் இந்த வாய்ப்பை தவறவிடாம பயன்படுத்திக்கோங்க மாணவர்களே.

இன்றைய படிப்போம் ஜெயிப்போம் நிகழ்ச்சியில, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர் நெடுஞ்செழியன் அவர்கள், இவர் TICF நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் மாணவர்களின் நலனுக்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருத்தரங்கங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்கு கூறியவை மிகவும் கவனிக்கத்தக்க செய்திகளாகவே இருந்தது அவை என்ன என்பதை காண்போம்.

மாணவர்களை அடுத்து என்ன செய்வது என்று அவர்களை சிந்திக்க விடுங்கள் அப்போதுதான் தேடல்கள் என்பது இருக்கும், தேடல்கள் இருந்தாலே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இன்றைய சுழலில் அதிகமான தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது, ஆனால் நமது தேடல் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இருப்பதனாலேயே நாம் அதை எல்லாம் கவனிக்காமலேயே சென்றுவிடுகிறோம்.

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, அரசு சார்பாக மட்டுமே எண்பதுக்கு மேற்பட்ட நுழைவு தேர்வுகள் இருக்கிறது, ஆனால் நமக்கு தெரிந்தவை குறிப்பிட்ட சில தேர்வுகள் மட்டுமே, இதை பற்றி தேடல்களை தேடுங்கள் என்கிறார்.

அதிக பணத்தை செலவு செய்து எழுதும் நுழைவு தேர்வுகளை மட்டுமே நாம் பார்க்கிறோம் அதில், கூட்டமாக எழுதி கூட்டத்தில் ஒருவராக இருந்துவிடுகிறோமே தவிர இலவசமாக இருக்கக்கூடிய, குறைந்த மாணவர்கள் எழுத கூடிய நுழைவு தேர்வுகளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை.

எல்லாம் நுழைவு தேர்வுகளையும் எழுதுங்கள், தேர்வுகள் எழுத எழுத தான் தேர்வுகளின் மீது இருக்கும் பயம் விலகி ஒரு தன்னம்பிக்கை வரும் என்கிறார். முதல் தேர்வுகளை எழுதிவிட்டாலே உங்களுக்கு தேர்வுகளின் மீது ஆர்வம் வரும் என்றார்.

அரசு கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள், நல்ல கல்வியை தரக்கூடிய அரசு கல்லூரிகள் ஏராளம் உள்ளது,கல்லூரியில் சேரும்போது கல்லூரியை பற்றி, நன்கு அறிந்து விசாரித்து பிறகு சேருங்கள், அதுவே ஒரு நல்ல தேடலாக இருக்கும்.

இன்றைய சூழலில் மாணவர்கள் விரைந்து, அனைத்தையும் கற்றுக்கொள்பவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு நாளும், தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கிறது, விரைவாக கற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்தடுத்து செல்ல முடியும் என்கிறார்.

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு, வாய்ப்புகளை அடையாளப்படுத்த வேண்டும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வழிநடத்தினால் மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றார் நெடுச்செழியன் அவர்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்