கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு!!

Malaimurasu Seithigal TV

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், கலந்தாய்வு முடிவுகள் நேற்று இரவ, www. mcc.nic.in என்கிற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில், அகில இந்திய ஒதிக்கீடான 15 சதவீத இடங்கள், ஒதிக்கீடு  செய்யபட்டுள்ளது.

இதில் நீட் தேர்வில் முழு மதிப்பெண் ஆன 720ற்கு 720 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த விழுப்புரத்தை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன், ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ இடம் பெற்றுள்ளார். அதேபோல், நீட் தேர்வில் 715 மதிப்பெண் எடுத்து ஆறாவது இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த மாணவர் என்.சூர்யா சித்தார்த் டெல்லி எய்ம்ஸ் கல்லூரியிலும் மருத்துவ சீட் பெற்றுள்ளார்.