AI teacher  
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

50 மொழிகளில் பேசும் AI ஆசிரியை.. தமிழ்நாட்டில் முதல் முறையாக.. அதுவும் நம்ம ராம்நாட்டில்! வேற லெவல் போங்க!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதியில் அமைந்துள்ள கிரிஸ்ட் தி கிங் பள்ளியில்

Anbarasan

தமிழகத்தில் முதல் முறையாக, ராமேஸ்வரம் கிறிஸ்டு தி கிங் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு ஏ ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபட்டிக் ஆசிரியை பள்ளி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது, ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலூ "ஏ ஐ ரோபோட்டிக்" தொழில்நுட்பத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதியில் அமைந்துள்ள கிரிஸ்ட் தி கிங் பள்ளியில், பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 50 மொழிகள் பேசத் தெரிந்த ஏஐ தொழில் நுட்பத்துடன் கூடிய ரோபோடிக் பள்ளி ஆசிரியை இன்று மாணவர்கள் முன்னிலையில் கிறிஸ்ட் தி கிங் பள்ளி நிர்வாகம் அறிமுகப்படுத்தினர்.

புதிதாக பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏஐ பள்ளி ஆசிரியையின் பெயர், மார்க்ஹேட் எனவும் இவர் 50 மொழிகளில் பேசக்கூடிய திறன் படைத்த ஏஐ தொழில்நுட்பம், எனவும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதற்காகவே, இந்த ஏஐ தொழில்நுட்பம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு பல்வேறு விதமான பதில்கள் வழங்கக்கூடிய புதிய ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய, ஆசிரியை பள்ளி மாணவர்களுக்காக நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ளதாக பள்ளி தாளாளர் பில்லிகிராம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு 50 மொழிகளில் பேசக்கூடிய ஏ ஐ தொழில்நுட்ப ரோபோட்டிக் ஆசிரியை அறிமுகப்படுத்தப்பட்டது, இதுவே முதல் முறையாகும் என பள்ளி நிர்வாகம் பெருமிதம் கொள்ளகிறது.

மாணவர்கள் எந்த மொழியில் கேள்விகேட்டாலும், இந்த ஏஐ ஆசிரியை அதே மொழியில் பதில் கூறுகிறது. மேலும், இது மாணவர்களின் மனநிலையை புரிந்து, பதிலளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்