கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.! வழிமுறைகள் வெளியீடு.! 

Malaimurasu Seithigal TV

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இலவசமாக கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், ஆதரவற்றோர், முதல் தலைமுறை பட்டதாரி ஆகியோருக்கு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ளோர் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.