பொழுதுபோக்கு

100 கோடி வசூலை குவித்த மாநாடு.. சிம்பு வேற லெவல் கம்பேக்

Malaimurasu Seithigal TV

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாநாடு.

ஹாலிவுட் ஸ்டைல் கதையை தமிழ் ரசிகர்கள் ஈஸியாகப் புரிந்து கொள்ளும்படி எடுத்தது தான் இந்த படத்தின் வெற்றி எனக் கொண்டாடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் மாநாடு படம் உச்சத்தை தொட்டுள்ளது.

முன்பெல்லாம் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர்களின் படங்கள்தான் 100 கோடி வசூலை அடையமுடியும் என்ற பிம்பத்தை உடைதெறிந்து படமும் கதையும் நன்றாக இருந்தால் எந்த நடிகர் வேண்டுமானாலும் 100 கோடி வசூல் செய்யலாம் என்பது தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் 100 கோடி வசூலை கொடுத்த நிலையில் அதனைத் தொடர்ந்து வெளியான சிம்புவின் மாநாடு திரைப்படமும் 100 கோடி வசூலை நெருங்கி விட்டதாக கூறுகின்றனர்.