பொழுதுபோக்கு

30 ஆண்டு அரசியல் வெற்றி - முதல்வராக விஜய்!!! என்னென்ன சொல்றான் பாருங்க...

30  ஆண்டுகாலமாக சினிமா துறையில் வெற்றி அடுத்த 30 ஆண்டுகள் அரசியலில் வெற்றி நாளைய முதல்வர் விஜய் என தேனி தளபதி மக்கள் இயக்கத்தினரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

விஜய் கடந்த 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்ற படத்தில் அறிமுகமாகி தற்போது வரை 30 ஆண்டுகள் முடிவற்ற நிலையில் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்றத்தினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்த கொண்டாட்டத்தில் தேனியில்  தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் 30 ஆண்டுகாலம் சினிமா துறையில் சாதித்த விஜய் வரும் 30 ஆண்டுகாலம் அரசியலில் சாதிப்பார் என்றும் நாளைய முதல்வர் விஜய் என்று போஸ்டர்கள் ஒட்டி விஜய் அரசியல் களம் காண்பார் என்பதை தெரியப்படுத்து வருகின்றனர்.

மற்றும் ஒரு போஸ்டரில் நாளைய முதல்வர் விஜய் என்றும் புஸ்லியானந்த் நாளை அமைச்சர் என்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் நாளைய சட்டமன்ற உறுப்பினர்கள் என்றும் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். இவர்கள் ஒட்டிய போஸ்டரால் விஜய் அரசியலுக்கு வருவார் என்பதை பொதுமக்கள் வெளிப்படுத்தும் விதமாகவும் தளபதி மக்கள் இயக்கத்தினரின் அரசியல் கனவை வெளிப்படுத்தும் விதாகவும் உள்ளது.

தற்போது நிலவிவரும் அரசியல் சூழலில் விஜய் ரசிகர்கள் 30 ஆண்டு கால சினிமா துறையில் சாதித்த விஜய்  30 ஆண்டு காலம் மக்களின் பேராதரவோடு அரசியலிலும் சாதிப்பார் நாளைய முதல்வர் விஜய் என்ற ஒட்டப்பட்ட போஸ்டரால் தேனியில் பரபரப்பு நிலவுகிறது.