பொழுதுபோக்கு

பிரபல தயாரிப்பாளர் ”இனிமேல் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க கட்டணம் வசூலிப்பேன்” இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு பேச்சு.!

பிரபல தயாரிப்பாளர் ஒருவர் இனி யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க கட்டணம் வசூலிப்பேன் என்று இசை வெளியீட்டு விழாவில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Selvi Selvakumar

பொதுவாகவே பல யூடியூப் சேனல்கள் தங்களுடைய வியூவர்சிப்புக்காக திரையுலக பிரபலங்களை பேட்டி எடுத்து அதனை ஒளிப்பரப்பி வருகின்றன. அவை நல்ல அளவில் ரீச் ஆகுவது மட்டுமில்லாமல் ஒரு சில நேரம் சர்ச்சையையும் ஏற்படுத்தும்.

அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் கடந்த சில மாதங்களாகவே பல யூடியூப் சேனல்களிலும், அதுமட்டுமின்றி திரைப்பட இசை வெளியிட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பரபரப்பாக பேசி வந்தார். அப்படி பேசும் போது பெரிய நடிகர் சிறிய நடிகர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் விமர்சனம் செய்யும் வகையில் பேசி வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே ராஜன், இனி யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க கட்டணம் வசூலிப்பேன் என்றும், ஆனால் அந்த பணத்தை ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக வழங்குவேன் என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.