பொழுதுபோக்கு

ஸ்டைலிஸ் ஸ்டார் ஹரீஷ் கல்யாண் அடுத்த அப்டேட்!! வெளியான மோஷன் போஸ்டர்

வெளியானது டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர்...

Tamil Selvi Selvakumar

தமிழ் சினிமாவில் பெண்களின் ஸ்டைலிஸ் ஸ்டாராக வலம் வரும் ஹரிஷ் கல்யாணின் அடுத்த திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் தரமான இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் சசி ‘சொல்லாமலே’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் ’ரோஜா கூட்டம்’ ’பூ’ ‘பிச்சைக்காரன்’ ’சிவப்பு மஞ்சள் பச்சை’ போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்.

இவர் அடுத்ததாக நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இட்னானி இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத், விஜே பார்வதி உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது  இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்ட நிலையில், இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகி இணையத்தில்  வைரலாகி வருகிறது.

அந்த போஸ்டரில் இந்த படத்திற்கு ’நூறு கோடி வானவில்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.