பொழுதுபோக்கு

ச்சீ....உன் கூட 12 வருஷம் வாழ்ந்த நான் ஒரு முட்டாள்..! டி.இமானை சாடிய அவரது முன்னாள் மனைவி!

Tamil Selvi Selvakumar

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் கடந்த டிசம்பர் மாதம் தனது மனைவி மோனிகா ரிச்சர்டை விவாகரத்து செய்தார். தொடர்ந்து மறைந்த பிரபல ஓவியர் உபால்டின் மகள் எமலி உபால்டை 2வது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இமானின் 2வது திருமணம் குறித்து  கருத்து தெரிவித்த அவரது முன்னாள் மனைவி, 12 வருடங்களாக உங்களுக்காகவே வாழ்ந்த ஒருவரின் இடத்தை எளிதாக வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டீர்கள், உங்களுக்காக வாழ்ந்த நான் ஒரு முட்டாள் என கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து, இமான் தனது திருமணத்தை அறிவித்ததை போன்றே ஒரு அறிக்கையை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டார். அதில் கடந்த சில ஆண்டுகளாக நானும் என் குடும்பத்தினரும் பட்ட வேதனைக்கு இந்த செல்லப்பிராணிகள்தான் மருந்து, இவை கடவுள் எனக்கு கொடுத்த வரம் என கூறி புதிதாக வீட்டிற்கு வந்துள்ள நாய்களை வரவேற்றுள்ளார். இந்த டிவீட் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது.