Ajith Kumar mother death Ajith Kumar mother death
பொழுதுபோக்கு

"நடிகர் அஜித் குமாரின் தாயார் வயது மூப்பால் காலமானார்!" துபாயில் இருந்து சென்னை விரைகிறார் அஜித்

நடிகர் அஜித் குமாரின் தாயாய் இறுதி சடங்கு நாளை காலை சென்னையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vinvizhi Leninton

நடிகர் அஜித் குமாரின் தாய் மோகினி வயது மூப்பின் காரணமாக இன்று காலை காலமானார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் அஜித் குமாரின் தாயாய் இறுதி சடங்கு நாளை காலை சென்னையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. துபாயில் இருக்கும் நடிகர் அஜித் குமாரி இன்று சென்னை திரும்பவுள்ளர்.

தமிழ் திரைஉலகைள முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் தெலுங்கு திரையுலகில் பிரேமா புஸ்தகம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். மேலும், தமிழில் அமராவதி திராபைடத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமா உலகில் காதல் மன்னனாக வலம் வந்த அஜித் குமார். மாஸ் ஹீரோவாகவும் புது பரிமாணம் எடுத்தார். அதன் பின்னர், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், தனது கனவான ரேஸிங்கில் கவனம் செலுத்த தொடங்கினர்.

அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் அவரது புகைப்படங்களும், ரேஸிங்கில் வெற்றி பெற்றதும் வந்தவண்ணம் இருந்தது. குடும்பத்துடன் தனது ரேஸிங் வெற்றியை கொண்டாடி மகிழும் பல வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. இந்நிலையில், நடிகரும், ரேசருமான அஜித்குமார் சமீபத்தில் துபாயில் இருப்பது போன்று வீடியோக்கள் வெளியாகின. அந்த வரிசையில் அஜித்குமார் தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுவருவது போன்ற வீடியோ டிரெண்ட் ஆகிக்கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை (மே 30) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜித் குமாரின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு நாளை சென்னையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அஜித்து குமாரின் தயார் உயிரிழந்ததை அடுத்து அவரை துபாயில் இருந்து சென்னை வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.