பொழுதுபோக்கு

அப்பாவானார் நடிகர் ஆர்யா... குட்டி தேவதை பிறந்துள்ளதால் மகிழ்ச்சி!

நடிகர் ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு பல்வேறு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

Malaimurasu Seithigal TV

நடிகர் ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு பல்வேறு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் நட்சத்திர தம்பதிகளாக திரையுலகில் ஜொலித்து வருகின்றனர். ஆர்யா நடிப்பில் வெளியான ‘கஜினிகாந்த்‌படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சாயிஷா. இந்த படத்தின் மூலம் நட்பாக பழகி வந்த இருவருக்கிடையே காதல் மலர்ந்தது. அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் சாயிஷா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான ‘டெடிபடத்திலும் ஆர்யாவுடன் இணைந்து சாயிஷா நடித்துள்ளார். ஆனால் ஆர்யா நிதானமாக படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா கர்ப்பமாக இருந்தார். இதையடுத்து இந்த நட்சத்திர தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்பாவான மகிழ்ச்சியில் உள்ள  ஆர்யாவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.