பொழுதுபோக்கு

நடிகர் ஹியூக் ஜாக்மேனுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி!!

Suaif Arsath

X- Men பட நடிகர் ஹியூக் ஜாக்மேனுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில்,

தனது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், 'தி மியூசிக் மேன்' நிகழ்ச்சிகளில் எனக்கு பதிலாக நடிகர் Max Clayton பங்கேற்பார் எனவும் தெரிவித்திருந்தார். நடிகர் ஹியூக் ஜேக்மேன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் தன்னை தனிமைப்படுத்திகொண்டார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து ஜூன் 14 முதல் 21 வரை நடைபெற உள்ள மெரிடித் வில்சனின் இசை நகைச்சுவை நிகழ்ச்சிகளில் அவரால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டோனி விருதுகளில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.