பொழுதுபோக்கு

ஜெயிலர் இறுதி கட்ட படப்பிடிப்பு - விஐயவாடா சென்ற நடிகர் ரஜினி!

Tamil Selvi Selvakumar

’ஜெயிலர்’ இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஆந்திர மாநிலம் புறப்பட்டு சென்றார். 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்நிலையில், படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று, ஆந்திர மாநிலம், விஜயவாடா புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு ரசிகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.