பொழுதுபோக்கு

’ஜெயிலர்’ படத்தில் இணைந்துள்ள நடிகர் சிவராஜ் குமார்...

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் பிரபல நடிகர் சிவராஜ் குமார் நடித்திருக்கிறார். இணையத்தில் அதன் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

Malaimurasu Seithigal TV

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிரூத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.

பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டதில் இருந்து, படத்திலிருந்து ஏதேனும் அப்டேட் வருமா என ரசிகர்கள் காத்திருந்த வேளையில், படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது நடிகர் சிவராஜ்குமார் படப்பிடிப்பில் இணைந்திருப்பதாக புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் புகைப்படம் ஏதேனும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் சிவராஜ்குமாரின் புகைப்படம் வெளியானதும் ஏமாற்றத்தில் உள்ளனர்.