பொழுதுபோக்கு

நடிகர் சிவாஜி கணேசனின் 96-ஆவது பிறந்த நாள்...தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை!

Malaimurasu Seithigal TV

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை அடையாறில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்பு, அங்கே வைக்கப்பட்டிருந்த  சிவாஜியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் சேகர்பாபு, துரைமுருகன், நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பிரபு, தமிழ்நாடு முதலமைச்சரின் அன்பிற்கு நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பதாக கூறினார்.