பொழுதுபோக்கு

’தலைவர் 169’ படத்தின் மாஸ் தகவல்: சின்ன தலைவர் கெட்டப்பில் நடிகர் சிவகார்த்திகேயனா? ரசிகர்கள் கேள்வி!

’தலைவர் 169’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

Tamil Selvi Selvakumar

’அண்ணாத்த’ திரைப்படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் இயக்கும்  ‘தலைவர் 169’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், ‘தலைவர் 169’ படத்தின் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.  இந்நிலையில் இந்தப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பொதுவாக நெல்சன் படம் என்றாலே, சிவகார்த்திகேயன் ஒன்று நடிப்பார் அல்லது பாடல் எழுதுவார். அந்த வகையில் தலைவர் 169 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், ஒரு பாடலை எழுதியிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. அதுவும் குறிப்பாக இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் இளவயது ரஜினி கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியானதும் அப்படி என்றால் சின்ன தலைவர் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த தகவல் உண்மை என்றால் சிவகார்த்திகேயனுக்கு சின்னத்தலைவர் என்ற பட்டம் நிரந்தரமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.