பொழுதுபோக்கு

நடிகர் சதீஷ் வீட்டிற்கு திடீரென விசிட் அடித்த நடிகர் சிவகார்த்திகேயன்!!

Tamil Selvi Selvakumar

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சதீஷ். இவர் கடந்த 2013 -ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘எதிர்நீச்சல்’ படத்தில் பீட்டர் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவுக்கு நண்பராக நடித்து பிரபலமானார். அந்த படத்தில் சிவகார்த்திகேயன் - சதீஷ் Combination வேற லெவல் ஹிட்டானது. இவர்கள் இணைந்து நடித்த காமெடிகள் படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்தது எனலாம்.

இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் காமெடி நடிகராகவே நடித்து வந்த சதீஷ் தற்போது ‘நாய் சேகர்’ திரைப்படத்தில் ஹீரோவாக என்ட்ரீ கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பெரும்பாலான விமர்சகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை தந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சதீஷ் தனது படத்தின் வெற்றியை ஒருபுறம் கொண்டாடி வர, இன்னொரு புறம் குடும்பத்துடன் மகளின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நடிகரும், அவரின் நெருங்கிய நண்பரும் ஆன சிவகார்த்திகேயன் திடீரென வருகை தந்து சர்ப்ரைஸ் அளித்து உள்ளார். சதீஷ் மனைவி மற்றும் மகளுடன் சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.