பொழுதுபோக்கு

'தல’ தோனியை சந்தித்து பேசினார் ’தளபதி’ விஜய்!

சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் திரைப்பட நடிகர் விஜய் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி சந்தித்து பேசிக்கொண்டனர்.

Malaimurasu Seithigal TV

சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் திரைப்பட நடிகர் விஜய் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி சந்தித்து பேசிக்கொண்டனர்.

வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் நேற்று முன்தினம் சென்னை வந்திருந்த மகேந்திர சிங் தோனி இரண்டு நாட்கள் தனியார் விளம்பர நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டிருந்தார். அதே படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யும் தனது பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனை அறிந்த இருவரும், ஒரே படப்பிடிப்புத் தளத்தில் இருந்ததால் இருவரும் சந்தித்துக் கொண்டு உரையாடினர்.

மேலும் படப்பிடிப்பு தளத்தில் இருந்த பல்வேறு நபர்களுடன் தோனி புகைப்படம் எடுத்துக் கொண்டார். தோனியும், நடிகர் விஜயும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் அவரது ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு  வருகிறது.