பொழுதுபோக்கு

வாத்தி பட இடைவெளியில் "வாத்தி COMING!"...

நடிகர் விஜயின் லியோ பட டீசர் வெளியாகும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் ‘லியோ’. அர்ஜுன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உட்பட பல பெரும் நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த ஒஅடத்தின் படபிடிப்பிற்காக கஷ்மீர் சென்றுள்ள படக்குழுவினர் அவ்வப்போது ஒரு சில அப்டேட்டுகளை விட்டு ரசிகர்களைக் குஷி படுத்டிக் கொண்டே இருக்கின்றனர்.

இந்த படத்தின் டைட்டிளான ‘லியோ’ வின் டீஸர் வீடியோவை வெளியிட்டு இருந்த நிலையில், அந்த டீஸர் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் வெளியிட்டாலும், திரையரங்குகளில் வெளியிட்டால் தானே ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் ஒரு பெரிய ப்ரொமோஷனாக இருக்கும்?

அதனால், தற்போது லியோ படத்தின் டைட்டிள் டீசரை தியேட்டர்களில் வெளியிடப்போவதாக தகவல் வெளியிட்டது. அதுவும், வருகிற 17ம் தேதி வெளியாக தயாராகும் வாத்தி படத்தின் இடைவேளையில், இந்த டீஸரை அதிகாரப்பூர்வமாக தியேட்டர்களில் திரையிட உள்ளதாக தயார்ப்பு நிறுவனம் வெளியிட்ட தகவல்காள் கூறுகின்றன.

இவ்வளவு பிரம்மாண்டமாக ப்ரொமோஷன்களை பார்த்து பார்த்து செய்யும் படக்குழுவினருக்கு அதிர்ச்சி தரும் வகையில், படபிடிப்பை ரகசியமாக யாரோ ரெக்கார்ட் செய்ய இருந்ததை அதிர்ஷ்டவசமாக கவனித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தடுத்து விட்டாராம்.