பொழுதுபோக்கு

வெளியானது நடிகர் விஜய்யின் "பீஸ்ட்" திரைப்படம்... ஆட்டம் பாட்டம் என விழாக்கோலம் பூண்ட திரையரங்கம்..!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

Tamil Selvi Selvakumar

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படம், உலகம் முழுவதும் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் திரையிடப்படுகிறது. இதனையொட்டி, பிரம்மாண்ட கட் அவுட்கள், பேனர்கள் என  திரையரங்குகள் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளன.

சென்னையில் ரோகிணி உட்பட பல திரையரங்குகளில் விடியற் காலை 4 மணிக்கே சிறப்பு காட்சிகள் தொடங்கின. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு ரிலீசாகும் விஜய் படம் என்பதால், நள்ளிரவு முதலே திரையரங்குகள் முன்பு குவிந்து வரும் ரசிகர்கள், ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.