பொழுதுபோக்கு

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில்...பிங்க் நிற கவுனில் தோன்றி ரசிகர்களை கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராய்...!

Tamil Selvi Selvakumar

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் 78வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது.  கோலாகலமாக துவங்கியுள்ள இவ்விழாவில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் மாதவன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளனர்.

இதில் கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் நடிகை ஐஸ்வர்யா ராயும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் கேன்ஸ் விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் அவர் அணிந்திருந்த பிங்க் நிற கவுன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  இதேபோல் பிரபல நடிகை தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்டோருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.