பொழுதுபோக்கு

காதலரால் தாக்கப்பட்ட நடிகை அனிக்கா....!!

Malaimurasu Seithigal TV

மலையாள நடிகையான அனிக்கா விக்ரமன் தன்னுடைய காதலரால், பலமாக தாக்கப்பட்டு முகம் முழுவதும் வீங்கி, காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தென்னிந்திய நடிகை அனிக்கா விக்ரமன் தனது முன்னாள் காதலன் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும் சமூக ஊடகங்களில், காதலர் பலமாக தாக்கியதால் ஏற்பட்ட காயங்களுடன், வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. 

அனிக்கா விக்ரமன், தன்னுடைய முன்னாள் காதலர் அனூப் பிள்ளை தன்னைத் தாக்கியதாக சமூக ஊடகங்களில் பதிவேற்றிய பின்னர், இவரின் முன்னாள் காதலர்மீது  காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் அனிக்கா தனது சமூக வலைதள பக்கத்தில்,  தங்கள் உறவு மற்றும் தன்னை அவர் துஷ்பிரோயோகம் செய்தது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.