ஷக லக பூம் பூம் என்ற குழந்தைகள் நாடகத்தில் சின்ன கொழு கொழு குழந்தையாக சினிமா துறையில் அறிமுகமான நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது பருவ வயதில், பிரபல தனியார் சோப் விளம்பரம் மூலம் இளைஞர்கள் மனதைக் கவர்ந்தார்.
பின், தமிழ் படங்களில் தனது கால் தடத்தைப் பதித்த நிலையில், இது வரை கண்டிராத அழகாக ரசிகர்களைக் கூட்டம் கூட்டமாக சுண்டி இழுத்தார். தனது அழகான் அசிரிப்பு, எதார்த்தமான நடிப்பு, அழகு என அனைத்து வகையிலும் சிறந்த நடிகையாக இருந்த ஹன்சிகா, தான் கால் பதித்த ஒரு சில ஆண்டுகளிலேயே, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.
சிங்கிள்ஸ் அனைவருக்கும் ஒரு நம்பிக்கையின் உருவமாக, பல ஆண்டுகளாக சிங்கிளாகவே இருந்த நடிகை ஹன்சிகா, தற்போது மிங்கிளாகி, அனைவரது மனதிலும் ஓட்டை போட்டு விட்டார் என்றே சொல்லலாம்.
பிரபல தொழிலதிபர் சோகேல் கதுரியா என்பவர், காதலுக்கே உரிதான காதல் நகரம் ஃபிரான்சில், படங்களில் வருவது போல, அழகாக மண்டியிட்டு மோதிரம் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தும் அழகான தருணங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “Now&Forever” என கேப்ஷன் போட்டு வெளியிட்டிருந்தார்.
அதற்கு அவரது காதலர் மற்றும் வருங்கால கணவரான சொகேல், “I love you my life #NowAndForever.” என கமெண்ட் செய்து இதனை உறுதி செய்துள்ளார். இதற்கு, பிரபல திரையுலகத்தினரான, வருண் தாவன், அனுஷ்கா ஷெட்டி, குஷ்பு சுந்தர் போன்ற பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து பதிவிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று தங்கள் காதல் பயணத்தை முடித்து மும்பை விமான நிலையத்தில் வந்தடைந்துள்ளனர் காதல் ஜோடி. இவர்களது போட்டோக்கள் தற்போது இணையத்தில் படு பயங்கரமாக பகிரப்பட்டு வரும் நிலையில், சிங்கிள் பாய்ஸ் அனைவரும் கண்களில் ரத்த வெள்ளத்துடன் காட்சியளிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்றே சொல்லலாம்.
மேலும் படிக்க | நடிகர் சிம்புவுக்கு 1,000 அடி நீளத்திற்கு ப்ளக்ஸ்..! மதுரை பாய்ஸ்சின் பாசத்தில் நனைந்த சிம்பு..!