பொழுதுபோக்கு

ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மலர் தூவி மரியாதை..!!!

தலைவி திரைப்பட நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Malaimurasu Seithigal TV

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள திரைப்படம் தலைவி. 

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடித்து உள்ளார்.

எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் படத்தின் கதாநாயகி கங்கனா ரனாவத் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள்  ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 அப்போது படத்தின் இயக்குனர் ஏ.எல் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் உடன் இருந்தனர். பின்னர் கருணாநிதி நினைவிடத்திலும் கங்கனா ரனாவத் மலர் தூவி மரியாதை செலுத்தினார் .