சமூக வலைத்தளத்தில் பட்டியலின மக்களைப் பற்றி அவதூறான வகையில் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் ஜாமின் கோரிய மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 35 நாட்களுக்கு மேலாக மீரா மிதுன் சிறையில் இருப்பதால் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு ஜாமின் கோரினார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.