பொழுதுபோக்கு

சூட்டிங் ஸ்பார்ட்டில் நைசாக திருட முயன்று மாட்டிக்கொண்ட சமந்தா..! வைரலான வீடியோ..!

படப்பிடிப்பு தளத்தில் நடிகை சமந்தா திருட முயன்று  மாட்டிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tamil Selvi Selvakumar

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள  ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து தற்போது  ’யசோதா’ மற்றும் ‘ஷாகுந்தலம்’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா படப்பிடிப்பின் போது, ஒரு மசால் வடையை நைசாக எடுக்க முயற்சிப்பதும் அவருடைய கையை ஒருவர் தட்டிவிடுவதுமான காட்சிகள் அடங்கிய வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் ’செட்டுக்கு சொந்தமான உணவை வெளிப்படையாக திருடக் கூடாது’ என்றும் அவர் காமெடியாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையங்களில் படு வைரலாகி வருகிறது.