பொழுதுபோக்கு

உலகத்திலேயே பிரசவ வலிதான் மிகப்பெரியது என்று கூறி சிலருக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை சமந்தா!!

உலகத்திலேயே பிரசவ வலிதான் மிகப்பெரியது என்று  கூறிய நடிகை சமந்தா...

Tamil Selvi Selvakumar

நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவுடனான 4 வருட காதல் திருமணத்தை முடித்து கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். அப்போது இந்த விவாகரத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறூ காரணங்கள் கூறப்பட்டது. அதில் ஒன்றாக, ‘சமந்தா குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்கவே விவாகரத்து செய்வதாக ஒருசிலர் குற்றஞ்சாட்டினர். இது பெரும் சர்ச்சையான நிலையில் சமந்தா இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா அளித்த பேட்டி ஒன்றில் பெண்களின் பிரசவ வலி குறித்து கூறியிருந்தார். அதாவது, ’பெண்கள்தான் மிகவும் வலிமையானவர்கள். உலகிலேயே மிகப்பெரிய வலி உடையது பிரசவம் தான் என்றும், ஆனால் அந்த வலியையும் ஒரு பெண் தாங்கிக் கொண்டு குழந்தை பெறுகிறார் என்றும், ஆனால் அதே நேரத்தில் தான் பெற்ற குழந்தையை ஒருதாய் பார்த்தவுடன் தனது வலி எல்லாம் மறந்து அந்த பெண்ணின் முகத்தில் சிரிப்பு உண்டாகும் என்றும், அதற்கு ஈடு இணையே கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

தாய்மை குறித்து இவ்வளவு அழகாக புரிந்து வைத்துள்ள சமந்தாவின் இந்த கருத்து, அவர் குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்கவே விவாகரத்து செய்வதாக குற்றம்சாட்டியவர்களுக்கு இது  தக்க பதிலடியாக அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.