பொழுதுபோக்கு

’ஊ சொல்றியா மாமா’ - வை தொடர்ந்து மீண்டும் ஐட்டம் டான்ஸ் ஆடும் சமந்தா..? பிரபல ஹீரோவுடன் இணைகிறார்

’ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை சமந்தா,  அடுத்ததாக இன்னொரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Tamil Selvi Selvakumar

தெலுங்கில் மாஸ் ஹீரோவாகவும், ஸ்டைலிஷ் ஸ்டாராகவும் வலம் வரும் அல்லு அர்ஜீன், நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தா நடனம் ஆடிய ’ ஊ சொல்றியா மாமா, ஊஊ சொல்றியா மாமா’ என்ற ஐட்டம் டான்ஸ் பாடல் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு இந்த பாடலும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம்.

இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த சம்ந்தாவை  தொடர்ந்து, ரெஜினா, தமன்னா உள்ளிட்ட ஒருசில முன்னணி நடிகைகளும் சில படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை சமந்தா மீண்டும் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை தெலுங்கு திரையுலகின் இன்னொரு மாஸ் ஹீரோவான நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்து வரும் ‘லிகர்’ படத்தில் சமந்தா நடனம் ஆட போவதாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

இருப்பினும், நடிகை சமந்தாவின்  ’ ஊ சொல்றியா மாமா’  ஐட்டம் டான்ஸ் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், விஜய் தேவரகொண்டா படத்திலும் சமந்தா நடனம் ஆடுவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது