வெள்ளி திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை தான் மக்கள் அதிகம் ரசித்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரம் மூலம் மக்களிடம் பெரியளவில் ரீச்சானவர் நடிகை ஷபானா.
இதனைத்தொடர்ந்து ஷபானாவுக்கும், பாக்கியலட்சுமி தொடரில் நடித்து பிரபலமான ஆர்யனுக்கும் இடையில் காதல் மலர்ந்ததை தொடர்ந்து , கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
இந்நிலையில், சில நாட்களாகவே ஷபானா-ஆர்யன் ஜோடி பிரிய போவதாக பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், இது குறித்து அவர்கள் விளக்கம் எதுவும் தரவில்லை.
இதற்கிடையில், தற்போது ஷபானா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத்துவத்துடன் கூடிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட்டை பார்த்த அவரது ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
ஒரு பக்கம் வதந்திகள் தீயாக பரவி வரும் நிலையில், ஷபானா இப்படி தத்துவத்துடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.