பொழுதுபோக்கு

மீண்டும் பணிக்கு திரும்பிய நடிகை ஷில்பா ஷெட்டி..!!

கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட நிலையில், பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி வெகு நாட்களுக்கு பிறகு தனது பணிக்கு திரும்பியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட நிலையில், பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி வெகு நாட்களுக்கு பிறகு தனது பணிக்கு திரும்பியுள்ளார்.

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா,  ஆபாச படங்களை உருவாக்கியது மற்றும் விநியோகித்த விவகாரத்தில்  கடந்த ஜூலை 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஷில்பா ஷெட்டி நடுவராக பங்கேற்ற பிரபல நடன நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.

தற்போது ராஜ் குந்த்ரா வழக்கில் விசாரணை தீவிரமாக நடைப்பெற்று வரும் நிலையில், ஷில்பா ஷெட்டி மீண்டும் நிகழ்ச்சிக்கு திரும்பியுள்ளார். அவரை ஊக்கப்படுத்தும் விதமாக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.