பொழுதுபோக்கு

10 மடங்கு வசூலை வாரிகுவித்த மலையாளப் படம்..! தமிழ் ரீமேக்கில் அதர்வா ஹீரோ..!

அஞ்சம் பத்திரா தமிழ் ரீமெக்கில் அதர்வா..!

Malaimurasu Seithigal TV

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான மலையாளப் படம் அஞ்சாம் பத்திரா. ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில் மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் குஞ்சாகோ போபன், ஷரப்பு தீ, உன்னிமயா பிரசாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

போலீசாரை குறி வைத்து தொடர் கொலைகளை செய்யும் கொலைகாரனை கண்டுப்பிடிக்கும் கதைக் களம் கொண்ட ”அஞ்சாம் பத்திரா”  ரூ.6 கோடி எடுக்கப்பட்டு ரூ.60 கோடிக்கும் மேல் வாரிகுவித்து அசத்தியது. 

இந்த நிலையில், இப்படம் தற்போது ஹிந்தியிலும், தமிழிலும் ரீமேக் ஆகிறது. ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட், ஆஷிக் உஸ்மான் ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஏபி இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. இதில் தமிழ் ரீமெக்கில் ஹீரோவாக அதர்வா நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ள நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.