பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதியின் சமீபத்திய புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வருகின்றன. நடிகர் கார்த்திக்கின் விருமன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ளார் அதிதி.
படம் வெளியாவதற்கு முன்பே சமீபத்தில் இவர் டாக்டர் படிப்பை முடித்து பட்டம் பெற்றிருந்ததை ஷங்கர் பெருமிதத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், அதிதி ஷங்கரின் சமீபத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பிளாக் அண்ட் வொயிட்டில், கருப்பு நிற மார்டன் உடையில் கலக்கியுள்ளார் அதிதி.