பொழுதுபோக்கு

மீண்டும் ஒரு திரில்லர் படத்தில் மிரட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. பூமிகா ட்ரெய்லர் வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மிரட்டலாக உருவாகியுள்ள பூமிகா படத்தின் 2வது ட்ரெய்லர் வெளியானது.

Malaimurasu Seithigal TV

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இவர் நடிப்பில் வெளியான காக்கா முட்டை, கனா, வட சென்னை ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தினார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பூமிகா திரைப்படம் ஒரு இயற்கை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இயற்கையை அழிக்கும் மனிதர்கள் இறுதியில் இயற்கை மனிதர்களை எப்படி அழிக்கிறது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். மேலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது தற்போது பூமிகா படத்தின் ட்ரைலர் வெளியிட்டுள்ளனர். தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.