பொழுதுபோக்கு

வெப் சீரிஸில் களமிறங்கும் அமலா பால்!! என்ன ரோல் தெரியுமா..?

தெலுங்கில் அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Malaimurasu Seithigal TV

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்மறையான கருத்துகளையும், வரவேற்பையும் பெற்றது. தமிழ் சினிமாவில் எந்த ஒரு ஹீரோயினுக்கும் இல்லாத துணிச்சலை அமலா பால் ஆடை திரைப்படத்தில் எடுத்திருந்தார். ஆடையே இல்லாமல் அவர் நடித்திருந்தாலும் ஆபாசம் இல்லாத அளவுக்கு படத்தின் ஒளிப்பதிவு இருந்ததால் மக்களிடம் பாரட்டைப் பெற்றது. 

ஆடை படத்தை தொடர்ந்து அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கடாவர் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வரும் அமலா பால், வெப் சீரீஸ் பக்கம் திரும்பியுள்ளார்.

சமந்தா நடிப்பில் வெளியான யூ டர்ன் படத்தை இயக்கிய பவன்குமார் தெலுங்கில் இயக்கியுள்ள வெப் சீரீஸ் ”குடி யெடமைதே”. ராகுல் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த சீரிஸில் அமலாபால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பேண்டஸி த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கும் குடி யெடமைதே சீரீஸில் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.