பொழுதுபோக்கு

திருமண வீடியோவை வெளியிட்ட அமலா பால்.. ஷாக்கான ரசிகர்கள்

Malaimurasu Seithigal TV

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால், தனது தம்பியின் திருமண வீடியோவை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அமலாபால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தார். இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா என்று வரிசையாக முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். 

அதுமட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார். அமலாபாலும், பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

பின்னர், திருமண பந்தத்தில் இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக விவாகரத்து செய்துகொண்டு பிரிந்தனர். இருந்தபோதிலும், கொஞ்சம்கூட மனம்தரளாத அமலாபால் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை அமலா பாலின் தம்பி அபிஜித்திற்கு நேற்று திருமணம் நடைபெற்று உள்ளது. 

திருமணத்தில் எடுத்த வீடியோவை நடிகை அமலாபால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து தனது சகோதரருக்கும் அவரது மனைவிக்கும்  வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.