பொழுதுபோக்கு

ஒசாகா திரைப்பட விழாவில் சாதனைகள் புரிந்த தமிழ் படங்கள்...சிறந்த நடிகராக தேர்வான நடிகர் விஜய்...!

Tamil Selvi Selvakumar

ஜப்பான் ஒசாகா சர்வதேச திரைப்பட விழாவில் மாஸ்டர் படத்திற்காக நடிகர் விஜய்-க்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பானில் ஒவ்வொரு வருடமும் தமிழில் வெளியாகும் படங்களுக்கு பல்வேறு பட்டியல்கள் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு ஒசாக்கா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 2021 ஆம் ஆண்டு வெளியான ’மாஸ்டர்’ படத்திற்காக நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ’சார்பட்டா பரம்பரை’ சிறந்த படத்திற்கான விருதும், சிறந்த இயக்குநருக்கான விருது  ’சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கிய பா.ரஞ்சித்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ’தலைவி’ படத்தில் நடித்த கங்கனா ரணாவத்துக்கு சிறந்த நடிகைக்கான விருதும், சிறந்த இசையமைப்பாளர் விருது ’மாநாடு’ படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவிற்கும், சிறந்த துணை நடிகர் விருது ’ஜெய் பீம்’ படத்துக்காக மணிகண்டனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிறந்த திரைக்கதைக்கான விருது மாநாடு படத்துக்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் அறிவித்துள்ளது. 

அத்துடன் சிறந்த காமெடியனுக்கான விருது ’டாக்டர்’ படத்தில் நடித்த ரெடின் கிங்ஸ்லிக்கும், சிறந்த வில்லனுக்கான விருது, 'மாஸ்டர்' படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது டாக்டர் படத்தில் நடித்த ஜாரா வினீத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#OTIFF2021 Awardees List