பொழுதுபோக்கு

பாலிவுட் முதல் கோலிவுட் வரை ரீச்சான BALMAIN...விலை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

சமீபகாலமாகவே இந்தியப் பிரபலங்கள் பலரும்  அணியும் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் டீ-ஷர்ட் குறித்து அலச தொடங்கிய ரசிகர்களுக்கு சுவாரசிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. 

Tamil Selvi Selvakumar

பாரிஸைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் Balmain எனும் பிராண்ட் டீ-ஷர்ட்தான் தற்போது இந்தியப் பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த பிராண்ட் டீ-ஷர்ட்டை பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான் மற்றும் ஷாருக்கான், பாலிவுட்டில் குயின் நடிகை எனக் கொண்டாடப்பட்டு வரும் நடிகை ஜாக்குலின், சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி உள்ளிட்ட பிரபலங்கள்  அணிந்திருக்கிறார்கள்.

மேலும் இந்த வரிசையில் டோலிவுட் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் கோலிவுட் நடிகர்களான தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் எனப் பலரும் இணைந்துள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் Balmain பற்றிய விவரங்களை அலச தொடங்கினர்.

அதில் பல சுவாரசிய தகவல்கள் வெளியானது. அதாவது பாரீஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் Balmain தயாரிப்பு நிறுவனம் பிரபலங்களுக்கு என்றே பிரத்யேகமாக அவர்கள் விரும்பும் வகையில் கருப்புநிறத்தில் டீ-ஷர்ட்டை தயாரித்து விற்பனை செய்துவருவது தெரியவந்துள்ளது. இதன் விலை 22 ஆயிரத்தில் துவங்கி 45 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறதாம். இந்த டீசர்ட்டின் விலையை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் இந்தியப் பிரபலங்கள் சிலர் Balmain டீ-ஷர்ட்டுக்கு மாறி பொதுஇடங்களில் உலா வந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது. 

அதேசமயம் இந்த நிறுவனம் ஆடைகள் மட்டுமின்றி பிரபலங்களுக்கான ஷு, லெதர் பைகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறதாம்.