பொழுதுபோக்கு

ரேட்டிங்கில் முதலிடம்.!! வெளியான படங்களிலேயே அதிக ரேட்டிங்கை பெற்றுஅசத்திய அண்ணாத்த

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம், தொலைக்காட்சியில் அதிக டி.ஆர்.பி. ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம், தொலைக்காட்சியில் அதிக டி.ஆர்.பி. ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது.

அண்ணன் – தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு உருவான ‘அண்ணாத்த’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக தொலைகாட்சியில் பல புது படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், திரையரங்கில் கடந்தாண்டு தீபாளிக்கு வெளியான அண்ணாத்த படமும் இந்த ரேஸில் களமிறங்கியது.

தற்போது சமூக வலைதளங்களின் வாயிலாக அண்ணாத்த படத்தை 17.37 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இத்துடன் தொலைக்காட்சிகளில் அண்ணாத்த திரைப்படம் 21.60 டி.வி.ஆர். ரேட்டிங்கைப் பெற்று கடந்தாண்டு வெளியான படங்களிலேயே அதிக ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது.