பொழுதுபோக்கு

ஆரவாரத்தோடு பட்டையக் கிளப்பும் அண்ணாத்த டீசர்....

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த அண்ணாத்த படத்தின் டீசர் வெளியானது.

Malaimurasu Seithigal TV

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்து தீபாவளியன்று வெளியாகும் திரைப்படம் தான் அண்ணாத்த.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் அப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இமான்  இசையமைத்துள்ள இந்த படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வரும் தீபாவளியன்று அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் டீசர் வெளியானது.