Anupama Dhruv Vikram 
பொழுதுபோக்கு

"ரெமோவா இருப்பார் சில நேரம் அந்நியன்" - Breakup குறித்து மனம் திறந்த அனுபமா! துருவை சொல்கிறாரா? 2 வருட வலியை பகிர்ந்த நேர்காணல்

'நர்சிஸிட்' என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர்களுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Vinvizhi Leninton

'பிரேமம்' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம், பலரது மனங்களை கொள்ளை கொண்டவர்தான் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் நடித்திருந்த 'பைசன்' திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும், அனுபமா பரமேஸ்வரனும் 'பைசன்' திரைப்படத்தில் நடித்த துருவ் விக்ரமும் காதலித்து வந்ததாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், அவர்களது நெருக்கமான புகைப்படம் ஒன்றும் சமூகவலைத்தளத்தில் வலம் வரத்தொடங்கியது.

தற்போது, அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள பேட்டி ஒன்று வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த பேட்டியானது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு போஸ்டிற்கும், சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டு வந்த மர்மமான பதிவுகளுக்கு இது ஒரு பதிலாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.

சமீபத்தில், அனுபமா பரமேஸ்வரன் தன்யா வர்மாவுக்கு அளித்த பேட்டியில், அவரது காதல் உறவு, அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எவ்வாறு பாதித்தது என்பது குறித்து விரிவாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் விவரித்து இருந்தார். அவர் தனது முன்னாள் காதலரின் பெயரை அந்த நேர்காணலில் குறிப்பிடவில்லை. இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருந்த பதிவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்த ஒரு பதிவின் பின்னால் இரண்டு வருட வலி, உடல் மற்றும் மன ரீதியான காயம் உள்ளதாக அவர் கூறியிருந்தார். தான் அனுபவித்த கொடுமைகளை விவரிக்க அவர் பயன்படுத்திய உவமை கூட, "அது இவராகத்தான் இருக்கும்" என்று நெட்டிசன்கள் அவர் துருவ் விக்ரமை கூறுவதுபோல் இருந்ததாக பலர் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

Anupama Parameswaran toxic relationship

அதில் அவர், அவரது முன்னாள் காதலர், சில நேரங்களில் ரெமோ-வாகவும், சில சமயங்களில் அந்நியனாகவும் மறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் ரெமோவாக இருக்கும் போது தன் மீது அவ்வளவு அன்பு பொழிவார் என்றும், நாம் மிகவும் அதிஷ்டசாலி என்று தோன்றவைப்பார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் அந்நியனாக மாறும் போது, "அது அவருடைய மிகக் கொடூரமான பக்கமாக இருக்கும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்பட மாட்டார் என்றும் அதே நபர் அடுத்த நாள் அம்பியாக மாறி, தனது தவறுகளுக்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டு, குழந்தை போல அழுவார். அந்தத் தவறுகளை மீண்டும் செய்ய மாட்டேன் என்று அவர் உறுதியளிப்பார், ஆனால் மீண்டும் அந்தக் காதல் சுழற்சி தொடரும்,” என்று அவர் கூறியிருந்தார். மேலும், 'நர்சிஸிட்' என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர்களுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Bison movie

மேலும் தன்னை, தான் நடித்த "டிராகன்' திரைப்படத்தின் பிரமோஷனுக்கு கூட செல்லவிடாமல் அடக்கியதாகவும் அனுபமா குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது முன்னாள் காதலை 'டாக்ஸிக்' என்றும் கூறியுள்ளார். அனுபமா பரமேஸ்வரன் மற்றும் துருவ் இருவரும் குறித்த காதல் வதந்திகளை இருவரும் பொதுவெளியில் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், தனது நேர்காணலில் அவர் தனது முன்னாள் காதலரின் பெயர் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அவரது நேர்காணலை பார்த்த பலரும் இணையதளத்தில் அவர் துருவ் விக்ரமைதான் குறிப்பிடுகிறார் என்று கூறிவருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்