பொழுதுபோக்கு

சினிமாவை ஆளும் 'Pan India' மோகம்!.. 'எல்லாம் ஃபிராடு'.. விட்டு விளாசிய அனுராக் காஷ்யப்!

படத்தோட பட்ஜெட் 400 கோடிக்கு மேல், ஆனா அதோட வெற்றி சந்தேகமா இருந்துச்சு. இந்த மாதிரி செலவு, படம் வெற்றி பெறலைனா, ப்ரொடியூசர்களுக்கு பெரிய இழப்பு

மாலை முரசு செய்தி குழு

பாலிவுட்டில் எப்பவும் தன்னோட வித்தியாசமான படைப்புகளால பேசப்படுற அனுராக் கஷ்யாப், இப்போ பான்-இந்தியா படங்கள் பத்தி ஒரு முக்கியமான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

பான்-இந்தியா படங்கள் ட்ரெண்ட் ஆரம்பிச்சது SS ராஜமௌலியோட Baahubali படத்தோட மெகா வெற்றியில இருந்து. 2015-ல வெளியான இந்தப் படம், தெலுங்கு மொழியில் இருந்து ஆரம்பிச்சு, இந்தியா முழுக்க பல மொழிகளில் டப் ஆகி, பாக்ஸ் ஆபிஸை உலுக்கியது. இதைத் தொடர்ந்து KGF, Pushpa, RRR மாதிரி படங்கள் இந்த ட்ரெண்டை இன்னும் பெருசாக்கின. இந்த படங்கள் ஒரு மொழியோட கதையை மட்டும் சொல்லாம, இந்தியா முழுக்க உள்ள மக்களையும் டார்கெட் பண்ணி, பெரிய பட்ஜெட், ஆடம்பரமான செட்ஸ், பல மொழி நடிகர்கள், மாஸ் ஆக்ஷன் காட்சிகளோட வந்து வெற்றி பெறுது. ஆனா, அனுராக் கஷ்யாப், 'இந்த பான் இந்தியா டிரெண்ட் ஒரு பெரிய மோசடி. ஒரு படம் இந்தியா முழுக்க வெற்றி பெறும்போது மட்டுமே அதை “பான்-இந்தியா”னு சொல்ல முடியும். ஆனா, இப்போ படம் எடுக்க ஆரம்பிக்குறப்பவே “பான்-இந்தியா”னு லேபிள் வச்சு, பெரிய பட்ஜெட், ஆடம்பர செலவுகளை ஜஸ்டிஃபை பண்ணுறாங்க'னு குற்றம் சாட்டுறார்.

இதுகுறித்து அவர் The Hindu-க்கு கொடுத்த இன்டர்வியூவில், “பான்-இந்தியா ஒரு மாஸிவ் ஸ்கேம். ஒரு படம் 3-4 வருஷம் ப்ரொடக்ஷன்ல இருக்கு. இதுல ஈடுபடுற நிறைய பேர், தங்களோட வாழ்க்கை செலவுக்கு இந்த படத்தை நம்பியிருக்காங்க. பணம் எல்லாம் படத்துக்குள்ள மட்டும் போகல. பெரிய, நிஜமே இல்லாத செட்ஸ்க்கு செலவாகுது. ஆனா, அப்படி எடுக்கப்படும் திரைப்படங்களில் 1% படங்கள் வெற்றிப் பெறுது”னு கஷ்யாப் சொல்லியிருக்கார்.

பிரச்சினை எங்க இருக்கு?

ஓவர் பட்ஜெட் செலவு: பான்-இந்தியா படங்கள் பெரிய பட்ஜெட்டோட வருது. ஆனா, இந்த பணம் கதை, ஸ்க்ரிப்ட், அல்லது நடிப்புக்கு செலவாகாம, பெரிய செட்ஸ், ஆடம்பரமான ஆக்ஷன் காட்சிகள், VFX-க்கு போகுது. உதாரணமா, Brahmastra படத்தோட பட்ஜெட் 400 கோடிக்கு மேல், ஆனா அதோட வெற்றி சந்தேகமா இருந்துச்சு. இந்த மாதிரி செலவு, படம் வெற்றி பெறலைனா, ப்ரொடியூசர்களுக்கு பெரிய இழப்பு.

ஃபார்முலா மயமாகுது: பான்-இந்தியா படங்கள் ஒரு ஃபார்முலாவை பாலோ பண்ணுது—மாஸ் ஹீரோ, பெரிய ஆக்ஷன், ஐட்டம் சாங்ஸ், மல்டி-லேங்குவேஜ் ரிலீஸ். ஆனா, இது கதையை பலவீனப்படுத்துது. “2-3 நிமிஷத்துக்கு ஒரு ஐட்டம் சாங் வச்சு, மக்களோட அட்டென்ஷன் ஸ்பேனை குறைச்சு, கதையை பலி கொடுக்குறாங்க”னு கஷ்யாப் குற்றம் சாட்டுறார். Baahubali அல்லது KGF மாதிரி வெற்றி பெற்ற படங்கள், தனித்தன்மையான கதையால வெற்றி பெறுது, ஆனா இப்போ எல்லாரும் அதை காப்பி அடிக்க முயற்சிக்குறாங்க.

1% வெற்றி ரேட்: கஷ்யாப் சொல்றது, ஒவ்வொரு வருஷமும் ஆயிரம் படங்கள் எடுக்கப்படுது, ஆனா 5-6 படங்கள் மட்டுமே 800-1000 கோடி கலெக்ஷன் பண்ணுது. RRR, KGF 2 மாதிரி படங்கள் வெற்றி பெறுது, ஆனா மத்த படங்கள் பாக்ஸ் ஆபிஸ்ல தோல்வியடையுது. உதாரணமா, 2024-ல Indian 2, Bade Miyan Chote Miyan மாதிரி பான்-இந்தியா படங்கள் பெரிய தோல்வியை சந்திச்சுது.

SS ராஜமௌலி ஒரு விதிவிலக்கு: ஏன்?

கஷ்யாப், SS ராஜமௌலியை ஒரு விதிவிலக்கா பாராட்டுறார். ராஜமௌலியோட Eega (2012) படம், உலகளவில் ஒரு ஆடியன்ஸை உருவாக்க ஆரம்பிச்சுது, RRR (2022) உலக அளவில் மெகா ஹிட்டானது. ராஜமௌலி படங்கள், பான்-இந்தியா லேபிளை வச்சு பண்ணாம, தனித்தன்மையான கதை, உணர்வு, மற்றும் கலாச்சார தொடர்போட வெற்றி பெறுது. “ராஜமௌலி தன்னோட விஷனை உலகத்துக்கு கொண்டு போறார். மத்தவங்க எல்லாம் வெறும் ஃபார்முலாவை காப்பி அடிக்குறாங்க”னு கஷ்யாப் சொல்றார். Baahubali படம், தெலுங்கு கலாச்சாரத்தை அடிப்படையா வச்சு, இந்தியா முழுக்க உள்ள மக்களை கவர்ந்தது. ஆனா, இப்போ பாலிவுட் இதை வெறும் “பெரிய செட்ஸ், மாஸ் ஆக்ஷன்”னு காப்பி பண்ணி, கதையை மறந்துடுது.

மலையாள சினிமா: ஒரு காண்ட்ராஸ்ட்

கஷ்யாப், மலையாள சினிமாவை பாராட்டுறார், ஏன்னா அங்க கிரியேட்டிவிட்டி இன்னும் வாழுது என்கிறார். “மலையாள படங்கள் ஒரிஜினல் கதைகளை சொல்றாங்க. Manjummel Boys, Aavesham, Premalu மாதிரி படங்கள், பெரிய பட்ஜெட் இல்லாம, கதையை நம்பி வெற்றி பெறுது. மலையாள சினிமாவில் நடிகர்கள், டைரக்டர்கள் ஒரு கூட்டு முயற்சியா வேலை செய்யுறாங்க, பாலிவுட்டில் இருக்குற ஈகோ, ஸ்டார் கல்ச்சர் இல்லை. “மலையாள சினிமாவில் எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுறாங்க. பணத்தை விட பேஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க”னு பாராட்டியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்