பொழுதுபோக்கு

சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல்.....

ரஜினி நடிப்பில் மிக பெரிய வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் 2005-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படத்தை பி. வாசு இயக்கினார். அதனைதொடர்ந்து மீண்டும் பி. வாசு இயக்கத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

இந்த படத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றன. ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க படக்குழுவினர் தன்னை அணுகி இருப்பதாக அண்மையில் நடிகர் வடிவேலு தெரிவித்திருந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.